நூலகம்
'கடலைப் போன்றது நூலகம்.
மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்
சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்
குளிப்போர் குளிக்கலாம்
காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்
மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்
வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்
முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.
செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.'
--குழந்தை ம. சண்முகலிங்கம்
'விரும்பிய பாடத்தை விரும்பிய நேரத்தில் விருப்பப்படி சென்று படிக்கக்,கதவுகளை விரியத் திறந்து வைத்துக் கொண்டு,வருக! வருக! என வரவேற்றுக் காத்திருக்கும் நூலகங்களும்,இதோ! இதோ! வென இன்னமுதூட்டி இரு கரம் நீட்டி அழைக்கும் நூல்களும் இருக்கும் வரைஅந்தச் சமூகம் அறிவமுதம் பெற்ற சமூகமாக இருக்கும்.
'காற்றும் ஒளியும் நீரும் எங்ஙனம் மக்களில் வேறுபாடு காட்டாமல் எவ்வாறு பயன் தருகின்றனவோ அது போலவே அறிவும் மக்கள் அனைவருக்கும் தரப்பட வேண்டும். இதற்கான நல்ல சாதனம் நூலகமே'
வே. தில்லைநாயகம்
தினசரிகள், சஞ்சிகைகள், கவிதைக்கோவை,
திருநெறிய பாசுரங்கள் என்றவாறாய்.....
புனைகதைகள், காவியங்கள், நாவல்கள்,
பாட்டு, பொருள் பொதிந்த சங்கீதம் என்றவாறாய் .....
திரவியங்கள் திரட்டி வைக்கும்
ஞானசோதித் திருக்கோயில் தான்,
நல்ல நூலகங்கள்.
பிறவி என்ற பேறு பெற்ற பலனை நல்கும்
பெட்டகங்கள் அடுக்கி வைத்த செல்வச்சாலை
உலகில் உள்ள நூலகங்கள்
- கவிஞர். இ.முருகையன்-
கற்கும் கைமண்ணளவு கல்விக்கூடத்தில்
கல்லாத உலகளவு நூலகத்தில்
FOLA
No comments:
Post a Comment