Home

Saturday, December 3, 2011

Famous Quotations-Librarian


நூலகர் 
கலைக்களஞ்சிய மனம், அபரிமித நினைவாற்றல், பரந்த வாசிப்புத்திறன் கொண்டவர் !
புலமைத்துவ நேர்மை, தன்னம்பிக்கை, சாமர்த்தியம் முன்னெச்சரிக்கை உணர்வு நிரம்பப் பெற்;றவர் !
கடமை மனப்பாங்கு, உதவும் மனப்பாங்கு, அடுத்தவர் கருத்தை மதிக்கும் மனப்பாங்கு, அடுத்தவருடன் நல்ல உறவை உருவாக்கும் மனப்பாங்கு கொண்டவர் !
மனித உறவுகளைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர் !
தொடர்பு ஊடகங்கள் பற்றிய புரிந்துணர்வு கொண்டவர் !
தகவற் குப்பையில் குன்றிமணித் தகவலைத் தேடி எடுக்கும் ஆற்றல் மிக்கவர் !
நூல் பற்றிய அடிப்படை அறிவு, களிமண் பதிவுகள் முதற்கொண்டு கணினிப் பதிவுகள் வரையிலான தகவல் சாதனங்கள் பற்றிய அறிவு, அறிவை முறைப்படி ஒழுங்கமைக்கும் அறிவு என்பவற்றைக் கொண்டவர்! விடயங்களைத் துல்லியமாக விளங்கும் ஆற்றல் உடையவர்!
வாசகனில் நம்பிக்கை, வாசகனில் மதிப்பு, வாசகனில் பாரபட்சமற்ற நடத்தை, வாசகனின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை, வாசகனின் தன்மைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் போன்றவற்றில் தேர்ந்தவர் !
சமூக நடத்தை தொடர்பான விழிப்பு நிலை உடையவர்!

No comments:

Post a Comment